வாக்காளர் பட்டியல் திருத்தம் ... நாளையுடன் கால அவகாசம் நிறைவு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளை (ஜன.30) முடிவடைகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 16.02 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்த இந்த அவகாசத்தை பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இதனால் 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்தது. இந்த மாற்றம் அரசியல் கட்சிகள் மத்தியில் கவனம் பெற்றது.

ஜனவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய பெயர் சேர்ப்பு பணி, ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டது. புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
