வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? இன்னும் 3 நாட்களே கெடு... விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!

 
வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR

 

தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு காலத் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும்  ஏப்ரல் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும். பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன.

வாக்காளர் பட்டியல்

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 7,600-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, இம்முறை 12.51 லட்சம் இளம் வாக்காளர்கள் (18-19 வயது) முதல்முறையாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 'Voter Helpline' செயலி மூலமோ இப்போதே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது விடுபட்டவர்கள், பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க மார்ச் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளதால், தகுதியுள்ள நபர்கள் உடனடியாகப் படிவம்-6 (Form-6) மூலம் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ   விண்ணப்பிக்கலாம். இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிட்டால், வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும் என்பதால், பொதுமக்கள் விரைந்து செயல்படுமாறு தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!