மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... நாளை வாக்கு எண்ணிக்கை - மும்பையில் 41% கடந்தது!
சுமார் நான்கு ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு, இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான மும்பை (BMC) உள்ளிட்ட 29 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
இன்று மாலை 3.30 மணி நிலவரம் வரையில் வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகி உள்ளது. வாக்குப்பதிவு மந்தமாகத் தொடங்கினாலும், மதியத்திற்குப் பிறகு சூடுபிடித்தது. அதிகாரப்பூர்வமான இறுதி சதவீத விவரங்கள் நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 3:30 மணி வரையிலான நிலவரம் மாநகராட்சிவாக்குப்பதிவு சதவீதம் மும்பை (BMC) 41.13%புனே (PMC) 42.10%தானே (TMC) 39.00%நாக்பூர் (NMC) 38.50% நாசிக் (NMC) 39.64% மாலேகான் 46.18%
மாலை 5:30 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஒட்டுமொத்த சராசரி 50% முதல் 55% வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆளும் 'மஹாயுதி' (பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி) கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான 'மகா விகாஸ் அகாடி' (உத்தவ் சிவசேனா, சரத் பவார் என்சிபி, காங்கிரஸ்) மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவற்றுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.தாக்கரே சகோதரர்கள்: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இணைந்து மராத்தி வாக்குகளைக் கவரப் பணியாற்றியது இந்தத் தேர்தலில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
