மாநிலங்களுக்கு ‘ஆப்பு’ வைத்த விபி - ஜி ராம் ஜி... பறந்தது மசோதா; கிழிந்தது நகல்... மக்களவையில் உச்சக்கட்ட மோதல்!

 
நாடாளுமன்றம் மக்களவை

மக்களவையில் இன்று நடந்த களேபரத்தைப் பார்த்தால் நீங்களே அதிர்ந்து போவீர்கள் வாசகர்களே! 'வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு' அதாவது விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டபோது, அவையே ஒரு போர்க்களமாக மாறியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதாவின் நகல்களை ஆவேசமாக கிழித்து எறிந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.

இந்த மசோதாவில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், ஒரு பக்கம் இனிப்பு, இன்னொரு பக்கம் கசப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு நிதியாண்டில் இதுவரை வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலைவாய்ப்பு இனி 125 நாட்களாக உயர்த்தப்படும் என்பது ஒரு நல்ல செய்தி. ஆனால், இதில் மறைந்திருக்கும் அந்தப் பெரிய 'ஆப்பு' தான் இப்போது விவாதமாகி இருக்கிறது. இதுவரை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 100 சதவீத நிதியையும் வாரி வழங்கி வந்தது. ஆனால் இனிமேல் அப்படி நடக்காது! புதிய சட்டத்தின்படி, மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு 40 சதவீத நிதியைத் தர வேண்டுமாம். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளின் தலையில் இது மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது.

நாடாளுமன்றம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. மகாத்மா காந்தி பெயரை நீக்குவதா? மாநில அரசுகள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதா? என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்விகளை அடுக்கி அமளியில் ஈடுபட்டனர். இன்று மசோதா நிறைவேறப் போகிறது என்று தெரிந்ததும், எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு ஆக்ரோஷமாகப் போராடினார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சில எம்பிக்கள், கையில் இருந்த மசோதா நகல்களைச் சுக்குநூறாகக் கிழித்து காற்றில் பறக்க விட்டனர்.

நாடாளுமன்றம் பாராளுமன்றம்

இதைப் பார்த்து டென்ஷனான மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 'மக்கள் உங்களை மசோதாக்களைக் கிழிப்பதற்காகவா இங்கே அனுப்பி வைத்தார்கள்? உங்களின் இந்தத் தரமற்ற செயல்பாடுகளை நாடு முழுவதும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று செம நோஸ்கட் கொடுத்தார். இந்தத் தள்ளுமுள்ளு மற்றும் அமளி காரணமாக மக்களவைக் கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் எப்படியோ முட்டி மோதி மசோதா நிறைவேறிவிட்ட நிலையில், இப்போது அது மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கும் இதே போன்ற அனல் பறக்கும் மோதல்கள் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!