விவஸ்தையே இல்லையா? மேடையிலேயே அறந்தாங்கி நிஷாவை விளாசிய VTV கணேஷ்!

 
விடிவி கணேஷ் விடிவி கணேஷ்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 அது நானாக திட்டவில்லை. இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் எனது கணவரும் நடித்துள்ளார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ, அப்படிதான் படத்திலும் அமைதியாக இருந்தார். நானும் வாயை திறந்துவிடுவாரா என எட்டிப்பார்த்தேன். இயக்குநரே என்னிடம், ‘உங்க கணவரிடம் ரியாக்சனே குறைவாக இருக்கிறது’ என்றார். உடனே நான் ‘15 வருடமாக ரியாக்சனே இல்லாம தான் சார் இருக்கிறார்’ என்றேன்.

நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா, தான் படத்தில் லெஜண்ட் சரவணனைத் திட்டி நடித்திருப்பதாகவும், அதனால் சில நாட்களுக்கு அவரது கடைப்பக்கம் தலைகாட்ட முடியாது என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் தன் கணவரின் நடிப்பு குறித்தும், படத்தில் தன்னை ஏன் கதாநாயகியாகப் போடவில்லை என சரவணன் யோசித்திருப்பார் என்றும் கலகலப்பாகப் பேசினார். நிஷாவின் இந்தப் பேச்சு அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், அடுத்து வந்த பேச்சு அனைவரையும் அதிர வைத்தது.

 அடுத்த படத்தில் ஹீரோயினாக வேண்டுமாம்… எங்க விவஸ்தையே இல்லையா? அதை கேட்டாலே நமக்கு சிரிப்பு தான் வருகிறது. அது மட்டுமல்லாமல் கணவர் குறித்து, அவரும் என்னுடன் நடித்தார். 15 நாட்கள் சும்மா வந்துட்டு போனாரு.. என்கிறார் நிஷா. இதையெல்லாம் யாருமே கேட்கவில்லையே” என்று கடுமையாக சாடினார்.

நிஷாவிற்குப் பின் மேடையேறிய நடிகர் விடிவி கணேஷ், நிஷா தேவையில்லாத விஷயங்களைப் பேசி வருவதாகவும், அவருக்கு விவஸ்தையே இல்லையா என்றும் கடுமையாகச் சாடினார். அவர் பேசப் பேச அருகில் இருந்த லெஜண்ட் சரவணனின் முகம் அப்படியே மாறிப்போனது. மேடைகளில் அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் விடிவி கணேஷின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!