நாளை திறப்பு… தொல்காப்பிய பூங்காவில் நடைப்பயிற்சி கட்டணம் பாதியாக குறைப்பு!
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இந்த பூங்கா, சென்னை ஐகோர்ட்டின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் காலை 6.30 முதல் 8 மணி வரையும், மாலை 4.30 முதல் 6 மணி வரையும் நடைப்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி பயணங்கள் காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடத்தப்படுகின்றன. வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்கும் பொதுமக்கள் பயணம் பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும். தற்போது பூங்காவில் 549 வகையான உயிரினங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனுமதி எண்ணிக்கை 500-லிருந்து 3,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. மாத கட்டணம் ரூ.500 இருந்து ரூ.250 ஆகவும், 3 மாதம் ரூ.750 ஆகவும், 6 மாதம் ரூ.1,250 ஆகவும், ஓராண்டு ரூ.2,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவுசீட்டு முன்பதிவு உள்ளிட்ட விவரங்களை www.crrt.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
