சாலை ஓரத்தில் நடந்துச் சென்ற போதும் கொடூரம்... கார் ஏற்றியதில் உடல்நசுங்கி 7 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு!

 
முஹம்மது ரிக்சன்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 வயது பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

மலப்புரம் தலைக்கடத்தூரைச் சேர்ந்தவர் சமீர். இவரது மகன் முஹம்மது ரிக்சன் (7) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று காலை 9.45 மணியளவில் திரூர் தலக்கடத்தூர் ஓவுங்கல் பரல் தேவாலயம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. சுவருக்கும் காருக்கும் இடையில் சிக்கி சிறுவன் பலத்த காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்தது. 

ரிக்சன் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் ​​கட்டுப்பாட்டை மீறிய வந்துக் கொண்டிருந்த நானோ கார் சிறுவன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சிறுவன் சுவருக்கும் காருக்கும் இடையில் சிக்கி உடல் நசுங்கி படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரிக்சனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முஹம்மது ரிக்சன் விபத்து

பலத்த காயமடைந்த சிறுவன் கொட்டகலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!