வக்பு வாரிய திருத்த மசோதா விரைவில் அமல்?... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 
வக்பு

 
இந்தியாவில் இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்கள் வக்பு வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் இஸ்லாமிய மக்கள் நலனுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  
இந்த வக்பு வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஒரு குழுவை 2024 ஆகஸ்ட்டில்  நியமனம் செய்தது. இந்த குழுவில் பாஜக மற்றும் NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் இருந்தனர். இந்த குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே திருத்தங்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

வக்பு
பிறகு விரிவான ஆய்வு மேற்கொண்டு மொத்தம் 66 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு இறுதியாக 22 திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் 14 திருத்தங்கள் மட்டும் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  பிப்ரவரி 13ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது மத ரீதியில் சிறுபான்மையினர் உரிமையில் தலையிடுவதாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வக்பு திருத்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், தற்போது நாடாளுமன்ற கூட்டு குழு தாக்கல் செய்த வக்பு வாரிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்பு

இந்த மசோதாவானது வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஒவ்வொரு வக்பு வாரியத்திலும் 2 இஸ்லாம் மதத்தை சாராதவர்கள் மற்றும் பெண்களுக்கு வக்பு வாரியத்தில் இருக்க வேண்டும். தானமாக வழங்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து வக்பு வாரியத்தை சேர்ந்ததா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாநில அரசின் அதிகாரி ஒருவர் அதனை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு திருத்தங்கள் வக்பு வாரிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web