இந்தியாவில் போர் பதற்றம்... மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

 
இந்தியா

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல் துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்புகள் மற்றும் தீவிர மதப் பேச்சாளர்கள் மூலம் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஷியா சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய குழுக்கள் நடத்தும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அணிவகுப்புகள் குறித்து முன்கூட்டியே கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரங்கள், மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கலந்து வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை தூண்டுதல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நிலைமையின் தாக்கம் உள்நாட்டில் பரவாமல் தடுக்க முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!