வெனிசுலாவில் போர் பதற்றம்… இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

 
வெனிசுலா

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதற்கு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தை என கூறி வந்தார். இதைத் தொடர்ந்து வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து நடத்தியது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சில கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையில், வெனிசுலா தலைநகர் கராகஸில் நேற்று அதிகாலை சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவித்தது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், வெனிசுலாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசர உதவிக்கு +58-412-9584288 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் cons.caracas@mea.gov.in மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெனிசுலாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!