மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு... ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

 
ஈரான் இஸ்ரேல்

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு அமைச்ச தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - காசா

இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை, பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்குதலில்

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலைத் தொடங்கியது. மேலும், ஈரான் தாக்குதலைத் தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது