உஷார்... வேகமெடுக்குது கொரோனா... ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா!

 
கொரோனா

குறைந்து வந்த நிலையில், மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறித்து இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 10,765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,42,83,021 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 67,556 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

நேற்று ஒரே நாளில் 1,97,477 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 92,52,74,799 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 220.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web