உஷார்... இன்று முதல் தமிழகத்தில் முக கவசம் கட்டாயம்... அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

 
ஸ்டான்லி மருத்துவமனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த பாதிப்பு, தற்போது நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பற்றிய கவலைகள் இல்லாமல், வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களும், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடிக் கொண்டு, கொரோனா தொற்றைப் பரப்பி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கு பொருட்டு, இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார்!! டபுள் மாஸ்க் அணிவதால் பிரச்சனைகள் உருவாகலாம்!! மருத்துவ விளக்கம் இதோ!!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10, 15 என்று இருந்த எண்ணிக்கையில், தற்போது 726 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குட் நியூஸ்!! இனி மாஸ்க் வேண்டாம்! மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு நாடு!

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பத்திலேயே நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்கள்,  மருத்துவர்கள்,  செவிலியர்கள், பணியாளர்கள்,  ஊழியர்கள் என அனைவரும் 100 சதவிகிதம் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web