தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை... அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் அதிரடி!

 
அரசு தேர்வுகள் இயக்ககம்

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.  10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 20 வரை நடைபெற்று வருகின்றன. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி

திட்டமிட்டபடி முடிகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை அனுப்பி வைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு அனைத்து தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இதனால் அரசின் உத்தரவை தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை  அறிவித்துள்ளது.  மதிப்பீட்டு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 19ம் தேதிக்குள் நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web