சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை... 16 கி.மீ புல்மேடு பாதையைத் தவிர்க்க அறிவுறுத்தல்!

 
சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் களைகட்டியுள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பத்தனம்திட்டா காவல்துறை ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக, அடர்ந்த வனப்பகுதியான புல்மேடு பாதையைப் பயன்படுத்தும் பக்தர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வயதான முதியவர்கள், இதய நோய் அல்லது நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள். சுமார் 16 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடினமான புல்மேடு வனப் பாதையை, பின்வருவோர் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழித்தடம் மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதோடு, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், உடல் ரீதியான சவால்கள் உள்ளவர்களுக்கு இந்தப் பாதை ஆபத்தானதாக அமையக்கூடும். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்ப  பக்தர்கள் விமான நிலையம் இருமுடி

வண்டிப்பெரியார் சத்திரம் மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக நுழைய ஒரு நாளைக்கு 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 'Virtual Queue' மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்கள் எக்காரணம் கொண்டும் இந்தப் பாரம்பரிய வனப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். எருமேலி வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காகத் தனி 'சிறப்பு அனுமதிச் சீட்டு' வழங்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சபரிமலை பெரிய பாதை காட்டுப்பாதை இருமுடி

சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 பக்தர்கள் அச்சன்கோவில் வழியாக அனுமதிக்கப்படாத வனப்பாதையில் நுழைந்து, திசை மாறி அடர்ந்த காட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு போலீசாரும் வனத்துறையினரும் அவர்களை மீட்டனர். இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் பக்தர்கள் ஈடுபட வேண்டாம் என்றும், அனுமதிக்கப்பட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் பம்பை வழியாகச் செல்லும் பிரதானப் பாதையைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!