மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அரசு தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வினை 8,51,303 பேரும், பிளஸ் 1 தேர்வுகளை 7,88,064 பேரும் எழுத உள்ளனர். தேர்வுகள் நடைபெறும் முறையை கண்காணிக்க 3,100 பறக்கும் படைகள் தயார் நிலையில் உள்ளன.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளை, செம்மையாக நடத்திட ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மொபைல் உட்பட எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த அனுமதி கிடையாது.
மாணவர்கள் மட்டுமல்ல தேர்வர்களும் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது.
தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. இதனை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். ஆள்மாறாட்டம் செய்தால், அந்த பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தரதடை விதிக்கப்படும். தேர்வர்கள் நேரத்தை காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அத்துடன் மாணவர்கள் பதற்றமின்றி பொதுத்தேர்வினை எழுத தயாராக வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க