நாளை நாடு முழுவதும் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை... உள்துறை அமைச்சகம் உத்தரவு!
May 6, 2025, 09:10 IST
நாளை நாடு முழுவதும் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கவிட்டு சோதனை நடத்தப்படும். போர் பதற்ற சூழலில் அவசரகால வெளியேற்ற ஒத்திகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிரிகள் தாக்கும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி என மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
