அரசு மருத்துவமனையில் மது விருந்தா? பெரும் பரபரப்பு!

 
அரசு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் செம்பனூரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. பழைய கட்டிடத்தில் உள்ள டாக்டர்கள் ஓய்வு அறையில், வெளிநாட்டு மதுபாட்டில்கள், சிக்கன், மட்டன் உணவுகள் படுக்கை முழுவதும் பரவி கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மது

இந்த வீடியோ கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் ஒருவர், தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும், வெளிநபர்கள் யாராவது ஓய்வு அறையில் மது அருந்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போலீஸ்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!