விரைவில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் ... அமைச்சர் அன்பில் மகேஷ் !

கேரள பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் வாட்டர் பெல் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தமிழகத்திலும் கொண்டுவருவோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டப்படும். “கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்,” எனக் கூறியுள்ளார். இத்திட்டம், கோடை மாதங்களில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மாணவர்களின் உடல்நலத்தையும், கவனத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
இந்த முயற்சி, தமிழ்நாட்டில் உள்ள 37,211 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும். பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதிகளை உறுதி செய்யவும், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாணவர்களிடையே ஆரோக்கியமான இந்த பழக்கத்தை ஊக்குவிக்க, இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வாட்டர் பெல்’ திட்டம், தமிழ்நாடு அரசின் மாணவர் நலன் சார்ந்த முயற்சிகளில் ஒரு முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் போன்ற பிற நலத்திட்டங்களுடன் இணைந்து, இது மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!