பரிசுப் பொருள் அரசியல்... தவெக ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் ... நாமக்கல்லில் பரபரப்பு!

 
தவெக தவெக

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகளைத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் முறியடித்து வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அருண்ராஜ் புகைப்படம் மற்றும் கட்சியின் கொடி அச்சிடப்பட்ட சில்வர் டப்பாக்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்தன. இதனை ரகசியத் தகவலின் பேரில் சென்ற அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மசூதி முன்பாக, ஆயிரக்கணக்கான தண்ணீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பாட்டில்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, தொழுகைக்கு வரும் மக்களுக்கு விநியோகம் செய்யத் தயாராக இருந்தன. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் எனப் பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அங்கு விரைந்த பறக்கும் படையினர் அனைத்துத் தண்ணீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களின் முன்பு அரசியல் கட்சி முத்திரையுடன் பொருட்கள் விநியோகிப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமன்றி, பல இடங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 'பூஸ்ட்' பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி அதிரவைத்துள்ளன. புதுக்கட்சி தொடங்கி முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக நிர்வாகிகள் இது போன்ற குறுக்கு வழிகளில் வாக்காளர்களைக் கவர முயல்வது மற்ற அரசியல் கட்சியினரிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதால், விதிமீறலில் ஈடுபடும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!