குடிநீர் கேன்களில் பாசி இருந்தால் ரூ.5,000 அபராதம்… தமிழக அரசு கடும் உத்தரவு!

 
watercan watercan

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில் குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல், அசுத்தம் அல்லது தரமற்ற நிலை கண்டறியப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்து கண்காணிப்பு நடத்தி வருகின்றன. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு அனுமதி எண் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பாசி பிடித்த கேன்கள், அசுத்தமான கேன்கள் மற்றும் மறுசுழற்சி வரம்பை மீறிய கேன்களை விற்பனை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சூரிய ஒளியில் கேன்களை நீண்ட நேரம் வைக்கக் கூடாது என்றும், தாதுப் பொருட்களின் அளவும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பில் இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தரச் சான்றிதழ் மற்றும் அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!