மைனஸ் 60 டிகிரி… தண்ணீர் கீழே விழாமல் காற்றிலேயே உறையும் அதிசயம் ... வைரல் வீடியோ!

 
நீர்
 

ரஷ்யாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது விடுதி அறை ஜன்னல் வழியாக தண்ணீரை வெளியே வீசுகிறார். ஆனால், அந்தத் தண்ணீர் தரையைத் தொடுவதற்கு முன்பே காற்றிலேயே உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.

கடும் குளிரின் தாக்கத்தை வெளிப்படுத்தும் இந்த காட்சி, ரஷ்யாவின் ஒரு நகரில் சுமார் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 19 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இத்தகைய சூழ்நிலையில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

‘indiaego’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ் காலங்களில் ரஷ்யாவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்வது சாதாரணமானதாக இருந்தாலும், காற்றிலேயே தண்ணீர் பனியாக மாறும் இந்த காட்சி இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!