திக் திக் வீடியோ... ராஜநாகத்துக்கு பைப்பில் தண்ணீர் !

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக விலங்குகள், பறவைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படுவதுண்டு. நாகங்களில் அதிக விஷம் கொண்டவை ராஜ நாகங்கள் தான்.
இவை பாம்புகளையே உணவாக சாப்பிடுபவை. இவை 6.7 மீட்டர் நீளம் வளரக்கூடியவை. ஒரே கடியில் ஆளை சாய்த்துவிடும் அளவுக்கு விஷம் கொண்டவை இந்த ராஜநாகங்கள். அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஒருவர் உச்சக்கட்ட பயத்துடன் ராஜ நாகத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்குகிறார். இந்த திக் திக் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இதன் நச்சு ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லகூடிய அளவுக்கு இருக்கும் .
இந்த பாம்புகள் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அதிக புத்தி கூர்மை கொண்டது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்துக்கு ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்குகிறார். அந்த பாம்புவும் வாயால் ஊதி ஊதி தண்ணீர் குடிக்கும் திக் திக் நிமிடங்கள் அடங்கிய வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!