வைகை அணையில் தண்ணீர் திறப்பு.... அமைச்சர் ஐ.பெரியசாமி மதகை திறந்து வைத்தார்!

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதே போல் முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!