ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல ... திருச்சி எம்.பி சிவா ஆவேசம்!

 
சிவா திருச்சி


 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை குறித்து  மக்களவையில் பேசினார்.  தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது .  

நாடாளுமன்றம் பாராளுமன்றம்

2024  மார்ச் 15ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதல்வரின்  ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும் என கூறினார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் எனவும் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பேச்சை திரும்ப பெற்றார். 

 நாடாளுமன்றம்
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் கருத்துக்கு திமுக எம்.பி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய மத்திய  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மும்மொழிக் கொள்கையில் எங்களுக்கு புரிதல் இல்லை எனக் கூற தர்மேந்திர பிரதானுக்கு அதிகாரமில்லை. ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என கூரினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web