எடப்பாடி வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பற்றி நாம் கவலையே படவேண்டாம்.... அமைச்சர் சேகர்பாபு!

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி திமுகவை குறித்து விமர்சனம் செய்து பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இருக்கிறார்கள் என்பது போல சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு ”அவர் பேசியதை பற்றி நீங்கள் மட்டும் தான் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டு வருகிறீர்கள். நீங்களும் மக்கள் தான் உங்களால் தான் ஒட்டு போட முடியும். எனவே, மீளாத துயரத்தில் இருந்தீர்கள் என்றால் எப்படி உங்களால் காலையில் எழுந்து இங்கு வர முடியும்? என்னை பொறுத்தவரையில் துயரமே எடப்பாடிக்கு தான். அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் நுழையமுடியாது என்கிற துயரத்தில் தான் எடப்பாடி இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். அவருடைய வாயில் இருந்து மங்களகரமாக வரும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு 4 வருடங்கள் ஆகிவிட்டது.
எனவே, அவருடைய வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பற்றி நாம் கவலையே படவேண்டாம். மக்கள் மகிழ்ச்சியோடு எழுச்சியோடு இருக்கிறார்கள்” எனவும் சேகர்பாபு பேசினார். தொடர்ந்து சென்னை குடமுழுக்கு குறித்த கேள்விக்கு ” அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. நாளை மறுதினம் நாங்கள் அங்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” எனவும் பதில் அளித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!