"அமெரிக்க எப்-18 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திட்டோம்!"... ஈரான் ... வைரல் வீடியோ!

 
போர் விமானம் போர் விமானம்


மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது 'தகவல் போர்'  உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அதிநவீன எப்-18  போர் விமானத்தை ஈரான் ராணுவம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான 'பிரஸ் டிவி'  தங்களின் புரட்சிகர பாதுகாப்புப் படை   அமெரிக்காவின் எப்-18 ரக விமானத்தைச் சபாஹர்   அருகே சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் ஈரான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், வானில் பறந்து கொண்டிருக்கும் போர் விமானம் ஒன்று ஏவுகணை தாக்கியவுடன் நிலைகுலைந்து, புகையை வெளியேற்றியபடி கடலில் விழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு என ஈரான் ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன.

 


ஆனால், ஈரானின் இந்தக் கோரிக்கையை அமெரிக்காவின் மத்திய ராணுவக் கட்டளை   அடியோடு மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் கூறுவது முற்றிலும் பொய். அமெரிக்காவின் எந்தவொரு போர் விமானமும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்படவில்லை. ஈரான் வெளியிட்ட வீடியோக்கள் போலியானவை   அல்லது பழைய விபத்துக்களின் தொகுப்பாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளது.கடந்த சில வாரங்களில் மட்டும் எப்-35 மற்றும் எப்-15 ரக விமானங்களை வீழ்த்தியதாக ஈரான் 4 முறை புகார்களைக் கூறியுள்ளது. ஆனால், அவை அனைத்தையும் அமெரிக்கா ஆதாரத்துடன் மறுத்து வருகிறது. "ஈரான் தோல்வி பயத்தில் இது போன்ற போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறது" என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றி வருவதால், எந்த நேரத்திலும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!