விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்... ஏர் இந்தியா தலைவர்!

 
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்... ஏர் இந்தியா தலைவர்! 


 
குஜராத் மாநிலத்தில்   அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து  ஏர் இந்தியா வெளியிட்ட பதிவில், குஜராத்தின் ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து  அறிந்ததும் மிகுந்த வருத்தடைந்தேன். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என  தெரிவித்துள்ளார்.

விமான விபத்து குறித்த உறுதியான தகவல்கள் கிடைத்ததும் பகிரப்படும் எனக்  கூறினார்.  குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. ஆமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.  242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்... ஏர் இந்தியா தலைவர்! 

விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். முதற்கட்டமாக விமான விபத்தில் 133 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது