ராமதாஸ் தலைமையை ஏற்க மாட்டோம்... பாமக தொண்டர்கள் போராட்டம்!

 
 ராமதாஸ் தலைமையை ஏற்க மாட்டோம்...   பாமக தொண்டர்கள் போராட்டம்!
பாமக தலைவர் அன்புமணி இனி செயல்தலைவராக மட்டுமே செயல்படுவார்  என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.  

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார் பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ்  இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பான கட்சியின் வளர்ச்சிக்காகவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும், மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது சிறுக சிறுக தெரிவிப்பேன் என கூறினார். 

 ராமதாஸ் தலைமையை ஏற்க மாட்டோம்...   பாமக தொண்டர்கள் போராட்டம்!

இதனையடுத்து பாமக தொண்டர்கள் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் வீதியிலுள்ள பாமக ராமதாஸ் இல்லம் முன்பாக திரண்டவர்கள் முன்னாள் பாமக நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் மீண்டும் அன்புமணி ராமதாசை தலைவராக அறிவிக்க வேண்டும் என  கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதற்கேற்றவாறு செயல்படுங்கள் செயல்படுங்கள் தேவையில்லாமல் போராட்டம் செய்யவேண்டாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் போராட்டம் செய்ய கூடாது எனக் கூறிய போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  தகவலறிந்து வந்த  போலீசார் கோஷங்களை எழுப்பியவர்களை கலைத்தனர். இதனால் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. போராட்டம் செய்தவர்கள் ராமதாஸ் தலைமையை ஏற்க மாட்டோம் அன்புமணி ராமதாஸ் தான் தலைவராக இருக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web