நாசகார கொள்கையை ரூ.10,000 கோடி கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்... ஸ்டாலின் திட்டவட்டம்!

 
தர்மேந்திர பிரதான்

 
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ரூ.497.06 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும்  47 முடிவுற்ற பணிகளை  திறந்து வைத்தார். மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.508.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு வழங்கினார்.

தர்மேந்திர பிரதான்


அடிக்கல் நாட்டியதும் விழாவில் ‘தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் குறித்தும்’ முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனைத் திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் ரூ.2000 கோடி நிதி தருவோம் என்று திமிராக பேசுவதோடு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘Blackmail’ செய்கிறார் . தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.

தர்மேந்திர பிரதான்


கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்யும் அனைத்து திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு புகுத்த நினைக்கும் நாக்பூரின் நாசகார கொள்கையை ரூ.10,000 கோடி கொடுத்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்.
இறுதியில் எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய தர்மேந்திர பிரதானை 30 நிமிடத்தில் திரும்பப் பெற வைத்த போர்க்குரல் கொடுத்து எம்.பி.க்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web