"அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்!" - வெனிசுலா பதிலடி!

 
ட்ரம்ப் வெனிசுலா

வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கும், வெளிப்புறக் கட்டளைகளுக்கும் வெனிசுலா ஒருபோதும் அடிபணியாது என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதைக் காரணம் காட்டி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் வெனிசுலா அருகே உள்ள கரீபியன் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை அதிக அளவில் குவித்து வருகிறது. இதனால், வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரம்ப் வெனிசுலா

மேலும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்கும், ராணுவக் குவிப்பிற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, "நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆனால், நாங்கள் விரும்புவது இறையாண்மை, சமத்துவம் மற்றும் சுதந்திரம் கொண்ட அமைதியை. அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது," என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

ட்ரம்ப்

"எங்கள் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கிறது. வெனிசுலாவை வீழ்த்த அமெரிக்கா சதி செய்கிறது. நாங்கள் மோதலுக்குத் தயாராக இருக்கும் நிலையில், வெனிசுலா வெளிப்புறக் கட்டளைகளுக்கு ஒருபோதும் அடிபணியாது," என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆவேசமாக முழங்கினார்.

அமெரிக்காவின் இந்தத் தொடர் அழுத்தங்களுக்கு மத்தியில், அதிபர் மதுரோவின் இந்தப் பேச்சு, வெனிசுலா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதைக் காட்டுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!