வலுவிழந்த புயல்... இன்று 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வலுவிழந்த 'டிட்வா' புயலின் தாக்கத்தால், வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 3, 2025) காலை 7 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பு இன்று காலை 10 மணி வரை நீடிக்கும்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் சில இடங்களிலும் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது:

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி), தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 13 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது: பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
