இன்று முதல் மழையின் ஆட்டம் ஆரம்பம்... வெதர்மேன் பிரதீப் ஜான் லேட்டஸ்ட் அப்டேட்!

 
வெதர்மேன்

தமிழகத்தில் இன்று முதல் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

வெதர்மேன்


அதன்படி, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெதர்மேன்  பிரதீப் ஜான் இன்று முதல் 19ம் தேதி வரை எங்கெல்லாம் மழை பெய்யும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ” மழை மீண்டும் தொடங்கிவிட்டது, இதனால், இன்றும் நாளையும் வெப்பநிலை வெகுவாகக் குறையும். தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெதர்மேன்
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகள் முதல் வேலூர் வரை இன்று பிற்பகல்  முதல் இரவு வரை சில நேரங்களில் மழை பெய்யும். இதனால், வெளியே செல்பவர்கள்   குடையை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
இன்றைய தினம் மார்ச் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனகாசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் நல்ல நீர்வரத்து (வெள்ளம்)  இருக்கும், அருவிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மூடப்படும். கொங்கு மண்டலத்தின் பிற உள் பகுதிகளில் மிதமான மழையும், சில நேரங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web