40,000 அடி உயரத்தில் விமானத்தில் திருமண நாள் கொண்டாட்டம் ... வைரல் வீடியோ!
வானில் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்பஸ் ஏ380 விமானத்தில், தம்பதியின் திருமண நாளைக் கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானப் பணியாளர்கள் இனிமையான புன்னகையுடன் கேக் ஏந்தி வந்து தம்பதிக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக அன்பான மகிழ்ச்சியை பரிசளித்தனர்.
சாதாரண பயணமாகத் தொடங்கிய அந்த நாள், இந்த அன்பான செயலால் தம்பதிக்கு மறக்க முடியாத வாழ்நாள் தருணமாக மாறியது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, விமானப் பணியாளர்களின் அன்பான கவனிப்பு மற்றும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு பாராட்டு பெருக்கியுள்ளது.
நெட்டிசன்கள், “இது போன்ற சிறிய செயல்களே பயணத்தை வாழ்நாள் அனுபவமாக மாற்றும்” என கருத்து தெரிவித்துள்ளனர். ஆடம்பர வசதிகளுக்குப் பெயர்பெற்ற எமிரேட்ஸ் நிறுவனம், தனிப்பட்ட கவனிப்பின் மூலம் தங்களின் தரமான விருந்தோம்பலை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
