அட!! இசைக்கச்சேரி , விருந்து உபசரிப்பு, மேள, தாளத்துடன் கிருஷ்ணர் சிலையுடன் திருமணம் !! இளம்பெண் அட்ராசிட்டி!!

 
ரக்‌ஷா

கடவுளையே திருமணம் செய்து கொண்டது புராணக் காலம் என்று தான் நினைத்திருந்தோம். இப்போதெல்லாம் தனக்கு தானே திருமணம், இரு பெண்கள் இணைந்து திருமணம், இரு ஆண்கள் இணைந்து திருமணம்,  திருநங்கைகள் திருமணம், பெண்ணாக மாறிய ஆண், ஆணாக மாறிய பெண் இணைந்து திருமணம் என கலாச்சார சீரழிந்துவருகிறது. சிலர் திருமணமே வேண்டாம் என துறவியாவதும் நடைபெற்று வருகிறது.

ஆனால் கிருஷ்ணரையே திருமணம் செய்து கொண்ட பெண் தான் லேட்டஸ்ட் டிரெண்ட் .  ஆண்டாள் கிருஷ்ணனையே மணாளனாக நினைத்து அவரையே மணந்து கொண்டாள் என்பதை தான் கதைகளில் படிக்கிறோம். அதே போல் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டு மணமகளை வாழ்த்தியது தான் கூடுதல் சுவாரஸ்யம்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஆவ்ரியாவில் அண்மையில் நடந்த திருமணம் ஒன்று பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரக்‌ஷா என்ற 30 வயதான பெண் ஒருவர் இந்து கடவுளான கிருஷ்ணனின் சிலைக்கு மாலை தன்னைதானே மாற்றி திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். இந்த திருமணத்தில் இசைக்கச்சேரி, விருந்து உபசரிப்பும் என களைகட்டியது.

ரக்‌ஷா

ரக்‌ஷா முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப்படிப்புக்கான LLB பட்டத்தையும் படித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே கிருஷ்ணர் மீது அதீத பக்தியும், ப்ரியமும் கொண்டிருந்திருக்கிறார். ஆகையால் வைணவ புராண கதைகளில் வரும் ஆண்டாளை போல பாவித்துக்கொண்டார். இந்த நிலையில், கிருஷ்ணர் மீது பற்றுக்கொண்ட ரக்‌ஷா கடந்த ஆண்டு ஜூலையில் தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட ரக்‌ஷாவின் பெற்றோர் அவரை மதுராவில் உள்ள பிருந்தாவனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ரக்‌ஷா

தன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டின் பேரில் சுக்செயின்பூரில் உள்ள உறவினரின் வீட்டில் வைத்து ரக்‌ஷா கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், கிருஷ்ணர் சிலையை மடியில் வைத்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.இது குறித்து பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேசிய ரக்‌ஷா, இருமுறை என்னுடைய கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர் எனக்கு மாலை அணிவித்தார், என தெரிவித்துள்ளார்.  இந்த திருமணத்தில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web