களைகட்டுது சென்னை!! ஜி-20 கூட்டமைப்பின் 2வது நிதி பணிக்குழு மாநாடு.!!

 
ஜி20


 
ஜி-20 கூட்டமைப்பு என்பது பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜி- 20 நாடுகள் கூட்டமைப்புக்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், ஜி -20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக் குழு கூட்டம், முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 31 முதல் மூன்று நாட்களுக்கு, சென்னையில் கல்வி பணிக்குழு கூட்டம் நடந்தது.

ஜி20
அதன் தொடர்ச்சியாக நிதி கட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்திற்கு, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பிரிட்டன் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், சர்வதேச உறவுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களை நடத்தினர். 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜி20
உணவு, எரிசக்தி, பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், நிதிப்பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் தங்கள் கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் ஏப்.12, 13-ம் தேதிகளில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஜி-20 நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.இம்மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அனந்த நாகேஸ்வரன், தமிழகத்தின் கலை, பண்பாடு, பாரம்பரியம் குறித்து ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் அறிந்துகொள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை இயக்குநர் ஜிஜேந்திரசிங் ராஜே, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மைய இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web