நாய்க்குட்டியை வைத்து துலாபாரம்... நடிகை டீனா ஸ்ராவ்யா சர்ச்சை!
தெலுங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சம்மக்கா சாரலம்மா ஜாதாரா திருவிழா, பழங்குடியின மக்களின் முக்கிய ஆன்மிக விழாவாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா இம்மாதம் 28 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் எடைக்கு எடையான வெல்லத்தை துலாபாரத்தில் வைத்து காணிக்கை செலுத்துவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை டீனா ஸ்ராவ்யா தரிசனத்திற்காக மேடாரம் வந்த போது, துலாபாரத்தில் தனது வளர்ப்பு நாயை அமர்த்தி வெல்லம் வைத்து காணிக்கை செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பழங்குடியின மக்கள் தெய்வமாக வழிபடும் சம்மக்கா சாரலம்மாவை அவமதித்ததாக கூறி பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த நடிகை, தனது செல்ல நாய் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், அது குணமடைந்தால் துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். பக்தியின் காரணமாகவே அந்த வேண்டுதலை நிறைவேற்றியதாகவும், மரபுகளை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
