பளுதூக்கும் பயிற்சி.. 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து வீராங்கனை உயிரிழந்த சோகம்!

 
யாஷ்டிகா ஆச்சார்யா

ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பளுதூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், யாஷ்டிகா இன்று வழக்கம் போல் ஜிம்மில் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருடன் அவரது பயிற்சியாளரும் இருந்தார். யாஷ்டிகா சுமார் 270 கிலோ எடையைத் தூக்க பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ​​எதிர்பாராத விதமாக, எடை அவரது கழுத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில், யாஷ்டிகாவின் கழுத்து எலும்பு முறிந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக யாஷ்டிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்த சம்பவத்தில் இறந்த யாஷ்டிகாவின் குடும்பத்தினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாஷ்டிகாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web