விவசாயக் கிணறில் பெண்மணி விழுந்து உயிரிழப்பு... பெரும் சோகம்!
மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு ஜெயமங்கள அவென்யூ பகுதியில் வசிப்பவர் வெங்கடசாமி (70) தன் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். அவரது மனைவி சரோஜா (65) நேற்று வீட்டில் காணாமல் போயிருந்தார்.

வெங்கடசாமி அருகில் தேடிக் கொண்டபோது, சரோஜா அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதிர்ச்சியடைந்த அவர் சம்பவத்தை சிறுமுகை போலீசாருக்கும் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
