பிரேமலதாவிற்கு முழு அதிகாரம் - தேமுதிக மாநாட்டில் 11 முக்கியத் தீர்மானங்கள் என்னென்ன?
தேமுதிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிக முக்கியமானதாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தேர்தல் நிலைப்பாடுகளை முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களின் சுருக்கம்:
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவெடுக்கப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. தேமுதிக நிறுவனத் தலைவர், 'கேப்டன்' விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துதல். விஜயகாந்திற்கு அரசு சார்பில் ஒரு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்துத் தரத் தமிழக அரசை வலியுறுத்துதல்.

கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்களின் உரிமையை மீட்க இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கரும்புக்கு உரிய நியாயமான விலையைத் தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கைச் சீரமைத்து, பொதுமக்கள் மற்றும் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க வேண்டும். சாதி மற்றும் மத ரீதியான மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
