விஷப்பூச்சி கடித்தால் உடனே செய்ய வேண்டிய அவசர சிகிச்சைகள் - செய்யக் கூடாத தவறுகள்?!
விஷப்பூச்சிகள் கடித்தவுடன் பதற்றமடைவதைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்படுவது விஷம் பரவுவதைத் தடுக்க உதவும்.
பூச்சி கடித்த இடத்தை உடனடியாக சோப்பு மற்றும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க, அந்த இடத்தில் ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து 10-15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம். பூச்சி கடித்த இடம் கை அல்லது காலாக இருந்தால், அதை இதயத்தின் மட்டத்திற்கு மேல் உயர்த்தி வைப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். முடிந்தால் கடித்த பூச்சி எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது மருத்துவ சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேனீ கடித்தால், கடித்த இடத்தில் துளசி சாறு அல்லது தேன் தடவுவது எரிச்சலைக் குறைக்கும்.

செய்யக்கூடாதவை:
பூச்சி கடித்தவுடன் சிலர் பயத்தில் சுருண்டு படுப்பார்கள். இது ரத்த ஓட்டத்தைச் சீரற்றதாக்கும்; எனவே நேராகப் படுப்பது நல்லது. கடித்த இடத்தில் நகத்தால் கீறுவதோ அல்லது அழுத்தி நகத்தை வைப்பதோ கூடாது. இது விஷம் ரத்தத்தில் வேகமாகப் பரவக் காரணமாகும். சினிமாவில் காட்டுவது போல வாயால் விஷத்தை உறிஞ்சி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உறிஞ்சுபவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். கடித்த இடத்திற்கு மேல் மிக இறுக்கமாகக் கயிறு கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தைத் தடுத்து தசை அழுகலுக்கு வழிவகுக்கும்.

அதன் பின்னர் கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல், முகம், கண்கள் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படுதல், தலைச்சுற்றல், மயக்கம் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு, இதயம் வேகமாகத் துடித்தல், உடல் முழுவதும் அரிப்பு அல்லது சிவப்புத் தடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நீங்களாக கைவைத்தியம் பார்க்காதீர்கள்.
சாதாரண எறும்பு அல்லது வண்டு கடித்தால், அந்த இடத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் கலந்த விழுதைத் தடவலாம். அதேபோல் கற்றாழை ஜெல் தடவுவது குளிர்ச்சியையும், நிவாரணத்தையும் தரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
