என்னா கோவம்?! வைரலாகும் வீடியோ... பீர் பாட்டிலால் போலீசாரின் மண்டையை உடைத்த இளைஞர்!

 
பகீர் வீடியோ...  பீர் பாட்டிலால் போலீஸ்காரரின் மண்டையை உடைத்த இளைஞர்!  

ஒரு மனுஷனுக்கு இவ்வளவு கோபம் ஆகாதுப்பா? என்று அங்கிருந்தவர்கள் விலக்கி விட முயன்றும், ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர். செய்வதறியாமல் கூட்டம் வேடிக்கைப் பார்த்தப்படியே கலைந்து செல்ல துவங்கியது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த திடீர் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 12ல் உள்ள ஓமேகா மருத்துவமனை அருகே காஜா என்ற இளைஞர் தனது வாகனத்தில் தொலிசொக்கியில் இருந்து பஞ்சாரா ஹில்ஸுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதிவிட்டார். இதனால் காரின் ஓட்டுநருடன் காஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கார் விபத்து விபத்தில்

இந்த தகராறு முற்றிய நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விலக்கி விட்டனர். அப்போது கோபமடைந்த காஜா போலீஸ்காரர் ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்‌.  சக போலீசார் அந்த இடத்திற்கு சென்று காஜாவை சுற்றி வளைத்தனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web