“சோறு திங்கறீயா... இல்ல...” கோவில் திருவிழாவில் ஆவேசமாக கத்திய அமைச்சர் சேகர்பாபு - வைரல் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் இன்று நடந்த தேரோட்டத்தின் போது, அமைச்சர் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
சுசீந்திரம் மார்கழித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வடம் பிடித்துத் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சில இந்து அமைப்பினர் திடீரென "வீர சாவர்க்கருக்கு ஜே" என அரசியல் ரீதியான கோஷங்களை எழுப்பினர்.
கோவில் திருவிழாவில் பக்தர்களை பார்த்து சோறு திங்கிறியா இல்ல பீய திங்கிறியா என்று கேட்ட அமைச்சர் சேகர்பாபு @PKSekarbabu #DMKFailsTN @mkstalin pic.twitter.com/o77uTpKgsk
— 𓃰𓆩Ꮮᴇɢᴇɴᴅ𓆪𓃰ᵀⱽᴷ🇪🇦 (@LegenD_AK_tweet) January 2, 2026
புனிதமான கோயில் திருவிழாவில் திட்டமிட்டு இத்தகைய கோஷங்களை எழுப்புவதைக் கண்டு அதிருப்தி அடைந்த அமைச்சர் சேகர்பாபு, கோஷமிட்டவர்களிடம் நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அமைச்சர் அங்கிருந்தவர்களைப் பார்த்து “சோறு திங்கிறியா இல்ல..” என்று ஒருமையில் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அமைச்சருக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால், அப்பகுதியில் மோதல் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அமைச்சரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
கோயில் திருவிழாவில் அரசியல் கோஷங்கள் எழுப்பப்பட்டது ஒருபுறம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒரு அமைச்சரே பகிரங்கமாகப் பக்தர்களைப் பார்த்து இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது மற்றொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைப்பினர் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
