ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை... மோடி ட்ரம்ப்பிடம் என்ன பேசினார்?

 
மோடி ட்ரம்ப்
 


 
இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர்  மோடி, அமெரிக்க அதிபர்  ட்ரம்புடன் ஜூன் 18ம் தேதி  தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மோடி தெளிவாக விளக்கம் அளித்திருந்தார்.  இந்த உரையாடலில்  மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என  திட்டவட்டமாகக் கூறினார். 

மோடி

“போர் நிறுத்தத்தை முதலில் கோரியது பாகிஸ்தான். இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ சேனல்கள் வழியாக பேசினோம். அமெரிக்காவின் மத்தியஸ்தம் இதில் இல்லை,” என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.ட்ரம்ப், தான் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், வர்த்தக அழுத்தங்கள் மூலம் இதை செய்ததாகவும் கூறியிருந்தார். ஆனால், மோடி இதை மறுத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அத்துடன்  “பாகிஸ்தான் மீண்டும் ஆத்திரமூட்டினால், இந்தியா கடுமையாக பதிலடி கொடுக்கும்,” என்று மோடி எச்சரிக்கை விடுத்தார்.

ஆபரேஷன் சிந்தூர்
அதே சமயம் இருவரின் பேச்சுவார்த்தையில்  ட்ரம்ப் மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு முன்பே திட்டமிடப்பட்ட பயணங்கள் காரணமாக மோடி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலாக, இந்தியாவில் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டிற்கு ட்ரம்பை அழைத்தார். ட்ரம்ப் இதற்கு உறுதியான பதில் அளிக்கவில்லை என்றாலும், இரு தலைவர்களும் இந்திய-அமெரிக்க உறவுகளையும், குவாட் கூட்டணியின் முக்கியத்துவத்தையும் பேசியதாகவும் இந்த தகவலை விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது