ராணுவ ஹெலிகாப்டர் தீப்பிடித்ததில் 4 வீரர்கள் பலி! பகீர் வீடியோ!

 
ஜூலியத் கார்சியா

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவத்திற்கு சொந்தமான UH1N ரக ஹெலிகாப்டர் குயிப்டோ என்ற பகுதியில் இருந்து ஆல்டோ நகருக்கு சென்றுக் கொண்டு இருந்தது. அதில் ராணுவ வீரர்கள் நான்கு பேர் பயணித்துள்ளனர். நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் குயிப்டோ நகரில் தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த மீட்பு படையினர், உடல் கருகி இருந்த ராணுவ வீரர்களளின் சடலங்களை மீட்டனர்.


இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. இந்த கோரவிபத்தில் கொலம்பியா நாட்டின் விமான பயிற்சியை முடித்த முதல் பெண் ராணுவ அதிகாரி ஜூலியத் கார்சியா என்பவர் உயிரிழந்தார் என கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணங்கள் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஜூலியத் கார்சியா

ஹெலிகாப்டர் விழுந்த காரணம் இன்னும் அறியப்படாததால், கொலம்பியாவின் தேசிய ராணுவம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்