வாணி ஜெயராம் மரணத்தில் திடீர் திருப்பம்! சந்தேக மரணமாக போலீசார் பதிவு! உடற்கூறாய்வு அறிக்கையில் புதிய தகவல் ?

 
வாணி ஜெயராம்

இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால்களை பாடியவர் வாணி ஜெயராம். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டில் பணியாட்கள் மட்டும் வந்து வேலை செய்து விட்டு திரும்புவர்.

இந்நிலையில் நேற்று காலை 10.45 மணிக்கு பணிப்பெண் மலர், வாணி ஜெயராம் வீட்டுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் அடித்தும் கதவு திறக்காததால், வாணி ஜெயராமின் சகோதரிக்கு மலர் தகவல் கொடுத்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையறையில் கட்டிலுக்கு அருகே சடலமாக வாணி ஜெயராமன் மீட்கப்பட்டார்.

வாணி ஜெயராம்

அவரது நெற்றியில் காயம் இருந்துள்ளது. இதனால் அவர் தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறுஏதும் நடந்ததாக என போலீசார் விசாரணை நடத்தினர். 

இதனிடையே, அவரின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடற்கூராய்வில் தூக்கத்தில் இருந்து திரும்பிப் படுக்கும் போதோ அல்லது எழுந்திருக்க முயன்ற போதோ கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது படுக்கை அறையில் உள்ள டீப்பாயில் விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாணி ஜெயராம்

நடு நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு உண்டாகி உயிர் பிரிந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், முழு உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்பே, தூக்கத்திலிருந்து விழுந்தாரா அல்லது உடல்நலக் கோளாறால் மயங்கி விழுந்தாரா என்பது குறித்த முழு தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்திருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வாணி ஜெயராமின் வீட்டில் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web