பிரபல பாடகர் யேசுதாஸ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

முண்ணனி பாடகர்களில் ஒருவரான யேசுதாஸ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.ஜே.யேசுதாஸ், கர்நாடக இசைக் கலைஞரும் புகழ் பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார்.இவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
சிறந்த திரைப்பின்னணிப் பாடகர் வகையில், வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.அதேபோல் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த பாடகராக விருது பெற்றுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் யேசுதாஸ் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் தான், கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யேசுதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ரத்த அணுக்கள் குறித்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் யேசுதாஸின் மருத்துவ அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!