அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? அப்பல்லோ விரைந்த முதல்வர் ஸ்டாலின்.. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

 
துரைமுருகன்

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக  அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமைச்சர் துரைமுருகனுக்குக் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட சோர்வு மற்றும் காலநிலைக் மாற்றம் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

 முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்கணும்... அமைச்சர் துரைமுருகன் அட்ராசிட்டி!  

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பயப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரின் உடல்நிலை குறித்து அறிந்தவுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!