பிரியங்காவுக்கு நேர்ந்த கொடூரம்... வரதட்சணைக்காக ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்!
திருமணமாகி இரண்டரை மாதங்களே ஆன நிலையில், ஒரு கணவனே தனது மனைவியின் அந்தரங்கத்தைப் பயன்படுத்தி வரதட்சணை கேட்டு மிரட்டியிருப்பது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பிரியங்காவிற்கும் (30), புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2025 அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 10 பவுன் நகை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 பவுன் நகை மட்டுமே அப்போது போடப்பட்டது. மீதமுள்ள 5 பவுன் நகையை நிலத்தை விற்றுத் தருவதாகப் பிரியங்காவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நிலத்தை விற்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த கணவர் பிரியங்காவை அவருக்குத் தெரியாமலேயே ஆபாசமாகப் படம் பிடித்துள்ளார். "மீதமுள்ள நகையைத் தராவிட்டால் இந்தப் படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன்" எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். கணவரின் மிரட்டலால் மனமுடைந்த பிரியங்கா, தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பிரியங்காவின் தாயார் சுமதி, தனது மகளின் மரணத்திற்குப் வரதட்சணைக் கொடுமையும், கணவரின் ஆபாசப் பட மிரட்டலுமே காரணம் எனப் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி இரண்டரை மாதங்களே ஆவதால், விதிகளின்படி விழுப்புரம் ஆர்.டி.ஓ இந்தத் தற்கொலை குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
