சுற்றுலா பயணிகளே உஷார்... பீச் ரிசார்ட்டில் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை! வசமாக சிக்கிய ரூம்பாய்!

 
பண்ணை வீடு

அடிக்கும் வெயிலுக்கு குடும்பம் குடும்பமாக ரிசார்ட்களிலும், தீம் பார்க்குகளிலும் குவிந்து வருகின்றனர். ரிலாக்ஸ் செய்வதற்காக செல்லும் இடத்திலும் ஜாக்கிரதையாக இருங்க. அங்கேயும் தங்கும் அறைகள், குளியல் அறைகளில் ரகசிய கேமிராக்கள் உள்ளனவா? ரூம் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சென்னையின் பிரபல ரிசார்ட்டில் ரூம்பாய் ஒருவர்  பூட்டியிருந்த ரூமிற்குள் காதலனுடன் தங்கியிருந்த பெண்ணிடம் அத்துமீறிய அதிர்ச்சி சம்பவம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.  

சென்னையில் கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனியில் பண்ணை வீடு நடத்தி வருபவர் காதல் பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன்.... இந்த பண்ணைவீட்டில்  chill க்ளைமேட், கடற்கரை ஓரம், நீச்சல் குளத்துடன் கூடிய வசதி என காதலர்கள் முதல் குடும்பஸ்தர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருந்து வருகிறது.

பண்ணைவீடு

இந்த பண்ணை வீடு சனி, ஞாயிறுகள் தொடங்கி ரிலாக்ஸ் செய்பவர்கள், குடும்பத்துடன் ஓய்வாக பொழுதை கழிக்க விரும்புபவர்க என பலரும் அடிக்கடி வந்து தங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.  சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பலர் வந்து இந்த பண்ணை வீட்டில் வீக் எண்டை Vibe செய்வது வழக்கம் அந்த வகையில்  சென்னையை சேர்ந்த 25 வயது  இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, இந்த பண்ணை வீட்டில் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார்.

அங்கு, தனது காதலியுடன் இளைஞர் தனியாக அறை எடுத்த நிலையில், அந்த அறையை பராமரிக்கும் பொறுப்பு, சென்னை சீக்கினாங்குப்பத்தில் வசித்து வரும்  சுபாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கே ரூம்பாயாக இருந்து வருகிறார். பகலில் காதலி மற்றும் நண்பர்களுடன் Vibe செய்து டையர்டாக இருந்த இளைஞர் ஒருவர்  இரவில் தனது காதலியுடன் அறையில் தூங்கியுள்ளார்.. இவர் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிட்டு கொண்டனர். இருந்தாலும், வெளிப்பக்கம் மூலம் எளிதாக திறக்கும் தாழ்ப்பாளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்திருந்த ரூம் பாய் சுபாஷ், இரவு டையர்டாக தூங்கி கொண்டிருந்த காதலர்களின் அறைக்குள் நைசாக நுழைந்தார்.  காதலர்களுக்கு நடுவில் படுத்து அருகில் படுத்திருந்த பெண்ணிடம் அவரது காதலனாக தன்னை காட்டிக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

பண்ணைவீடு

வித்தியாசமான உணர்வுகள் நிகழ்ந்ததால் உடனே எழுந்து அறையின் லைட்டை ஆன் செய்தார் காதலி. அருகில் காதலன் நன்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து விட்டார்.  உடனே, பெண் கூச்சலிட்டதை கேட்டு அவரது காதலன் உட்பட அனைவரும் எழுந்தனர். அப்பெண் நடந்ததை கூற காதலன், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறை முழுவதும் தேடியதில் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த ரூம் பாயை பிடித்து அவரை நையப் புடைத்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.  

இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தொடுத்த தாக்குதலால் காயமடைந்த சுபாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விசாரணைக்காக சுபாஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில், இதுவரை பண்ணை வீட்டில் தங்கிச் சென்ற பல பெண்களின் ஆபாச வீடியோக்கள், குளியலறை வீடியோக்களைக் கண்டு அதிர்ந்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சுபாஷிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

அடுத்தகட்ட விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டு ஏகப்பட்ட உண்மைகள் வெளிவரக்கூடும் என காவல் துறையினர் முதல் கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web